புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு : புகாருக்கு பதில் சொல்ல ஸ்டாலின் தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் சவால்
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முந்தைய திமுக ஆட்சியில் முறைகேடு நிகழ்ந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
"மு.க. ஸ்டாலினுக்கு டி. ஜெயக்குமார் சவால்"
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முந்தைய திமுக ஆட்சியில் முறைகேடு நிகழ்ந்ததாக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதில் அளிக்க தயாரா ? என சவால் விடுத்தார்.