பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்ககூடாது : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்ககூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
* 1956-ம் ஆண்டில் இருந்து, தற்போது வரை நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக மானிய குழு நன்றாக செயல்பட்டு வருவதாகவும், அதனை கலைத்து விட்டு, உயர்கல்வி ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க தேவையில்லை எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
* உயர்கல்வி ஆணையத்தில், நிதி வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு செல்வதால், தமிழகத்திற்கு கிடைக்கப்பெற வேண்டிய நிதி குறைந்து விடும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
* பல்கலைக்கழக மானியக் குழு மூலம், தமிழகத்திற்கு தற்போது100 சதவிகித நிதி கிடைத்து வரும் நிலையில், உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், அந்த நிதியை 60க்கு 40 என்ற விகிதத்தில் தமிழக அரசு செலவிட வேண்டிய நிலை ஏற்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
* எனவே பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.