உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே டிஜிபி நியமனம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக, தமிழகத்தில் டிஜிபி நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

Update: 2018-07-05 08:38 GMT
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக, தமிழகத்தில் டிஜிபி நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

* தற்போதைய டிஜிபி ஓய்வு பெறும் நாளில் இரவு 11.30 மணிக்கு, பணி நீட்டிப்பு வழங்கியதாகவும், பணி நீட்டிப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும் ஸ்டாலின் கூறினார். 

* டிஜிபி பதவிக்கு வர வேண்டும் என விரும்பும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர், அந்த பதவிக்கு வராமலேயே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள் என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்

* தற்போதைய டிஜிபி நியமனத்தை ரத்து செய்து, முறைப்படி புதிய டிஜிபியை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

* இதே கருத்தை வலியுறுத்தி காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமியும் பேசினார். 

* இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதுதொடர்பாக நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி விளக்கமளித்தார். 

* வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான 
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மட்டுமே, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி டிஜிபி நியமனங்களை மேற்கொள்வதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார்

* மற்ற 29 மாநிலங்கள் அதை கடைபிடிப்பதில்லை என கூறியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். 

* அதனால், உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய வழிகாட்டுதல்படியே, தமிழக அரசு, டிஜிபி நியமனம் செய்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்

* உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள சில வழிகாட்டுதல்களை, வரும் காலங்களில் கடைபிடிக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்