காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-19 10:06 GMT
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு  பிரதிநிதியை நியமிக்காமல், காவிரி வரைவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு குமாரசாமி கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, தேவையில்லாத ஒன்றை பற்றி தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

காவிரி வரைவுத் திட்டத்தின் மீது கர்நாடக அரசின் கருத்துகளையும் பெற்ற பிறகே, மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும், ஜூன் 12-க்குள் பிரதிநிதியின் பெயரைக் கொடுங்கள் என்று மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக குமாரசாமி கூறியதற்கும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா போலவே, காவிரி பிரச்சினையில் எதிர்மறை அணுகுமுறை தற்போதும் தொடர்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
 
தமிழக முதலமைச்சரையும், தமிழக எதிர்க் கட்சிகளையும் சந்திக்க மறுத்த பிரதமர் மோடி, கர்நாடக முதலமைச்சரை மட்டும் சந்திக்க நேரம் ஒதுக்கியதன் மூலம் தமிழக விவசாயிகளை மோடி பொருட்டாக கருதவில்லை எனவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். 

இனியும் தாமதிக்காமல் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அதிகாரத்தின் கீழ், கர்நாடக மாநில அரசிடமிருந்து பிரதிநிதியின் பெயரை மத்திய அரசு பெற வேண்டும் என்றும் கர்நாடக அரசு பெயரைக் கொடுக்கத் தவறினால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்