சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடபாக சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
காங். எம்.எல்.ஏ. விஜயதரணி வெளியேற்றம் ஏன்? - சபாநாயகர் தனபால் விளக்கம்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது சட்டப்பேரவையில் நடவடிக்கை எடுத்தது குறித்து சபாநாயகர் தனபால் விளக்கமளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக இன்று பேசவேண்டுமென இன்று காலை தான் விஜயதரணி கோரிக்க விடுத்தார் எனவும், மற்றொரு நாள் அனுமதி தருவதாக தான் கூறியதாகவும் சபாநயகர் தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்காமல் விஜயதரணி தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னை கடுமையாக பேசியதால் தான் நடவடிக்கை எடுத்தாகவும் சபாநயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார். மேலும் உறுப்பினர் விஜயதாரணி நடந்துக்கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என்றும் எதிர்காலத்தில் இதுபோன்று நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.