எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து மீதமுள்ள 17 பேர் முறையீடு.

17 பேரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரணை - உச்சநீதிமன்ற கோடைகால அமர்வு.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக, 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தங்க தமிழ்ச் செல்வனை தவிர்த்து மீதமுள்ள 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தனர். அதில், தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி இருந்தனர். மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அமர்வு முன், கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வருகிற 27ஆம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி அறிவித்தார்