பிரதமர் மோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு : தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கை தாக்கல் ?
தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பிரதமர் மோடியிடம், ஆளுநர் பன்வாரிலால் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். ஆளுநர் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால், நேற்று குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த ஆளுநர், தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கையை வழங்கியதாக கூறப்படுகிறது.