மூணாறு குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, காட்டுயானைகள் உண்ட காட்சிகளை பார்த்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறு பஞ்சாயத்திலுள்ள குப்பைகள் அனைத்தும் கல்லார் பகுதியிலுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகிடங்கில் உள்ள காய்கறி கழிவுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் காட்டு யானைகள் உண்டு வரும் காட்சிகளை சமூக ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி உள்ள நிலையில் யானைகள் பாதிக்கப்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்