மக்களை கடித்து கொன்ற ஓநாய் - சிக்காமல் போக்கு காட்டும் அதிர்ச்சி சிசிடிவி

Update: 2024-09-26 12:34 GMT

உத்தர பிரதேசம் மாநிலம் பரைச் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்களை சில ஓநாய் கூட்டங்கள் அச்சுறுத்தி வந்தன. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 10 பேரை ஓநாய்கள் கடித்துக் குதறி கொன்றுள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய தீவிர தேடிதல் வேட்டையில் ஆறு ஓநாய்களில் 5 ஓநாய்கள் பிடிபட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆறாவது ஓநாயை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் வனத்துறையினரின் வலையில் சிக்காமல் அந்த ஓநாய் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் ஆறாவது ஆட்கொல்லி ஓநாய் இன்று காலை, வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் சிக்கி உள்ளது. பரைச் பகுதியில் சிக்கந்தர் என்ற இடத்தில் ஆறாவது ஓநாய் சுற்றித் திரிவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் தேடுதல்

வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்