சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை...அவரை பார்க்க விடாமல் தடுத்த அதிகாரிகள்...Delhi
டெல்லியில் அரசு அதிகாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தர்ணாவில் ஈடுபட்டார்.
சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்ற ஸ்வாதி மாலிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். பின்னர் தரையில் அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் தரையில் அமர்ந்திருப்பது டெல்லி காவல்துறைக்கும் மருத்துவமனைக்கும் வெட்கக்கேடான விஷயம் என்று அவர் கூறினார்