சிறுமியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்... நிர்வாணமாக கட்டி வைத்து அடித்த மக்கள்
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள பர்ஹான் காவல் நிலைய துணை ஆய்வாளர் சந்தீப் குமார் திஹேயா என்பவர், மதுபோதையில் அதே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி சத்தம் போட்டதும், வீட்டின் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் ஓடிவந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் அருகே உள்ள தூணில், சந்தீப் குமாரை கட்டி வைத்த நிலையில், பொதுமக்கள் அவரை தாக்கினர். இந்த வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகியது. தகவல் அறிந்து வந்த போலீசார், காவல்துறை துணை ஆய்வாளரை பத்திரமாக மீட்டுச் சென்ற நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.