நாட்டையை நடுங்கவிட்ட குற்றவாளி.. 28 வண்டியில் பறந்த போலீஸ்-விடிய விடிய வேட்டை.. கடைசியில் அதிர்ச்சி

Update: 2024-03-07 06:14 GMT

நாட்டையை நடுங்கவிட்ட குற்றவாளி.. 28 வாகனங்களில் பறந்த போலீஸ் - விடிய விடிய வேட்டை.. கடைசியில் அதிர்ச்சி

பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி துமகூருவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, 28 வாகனங்களில் சென்று அதிகாரிகள் விடிய, விடிய சோதனை நடத்தினர்.

vovt

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி 2 குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தநிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சம்பவத்தின்போது கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குண்டுவெடிப்பு குற்றவாளி துமகூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு பெங்களூருவில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் 28 வாகனங்களில் துமகூருவுக்கு விரைந்தனர். அங்கு ஒரு இடம் விடாமல் இரவு முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இருப்பினும் யாரும் கைது செய்யப்படாத நிலையில், போலீசாரின் அதிரடி சோதனையால் அந்த நகரமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்