மனித உடல் உறுப்புகள் கடத்தி விற்பனை - இந்தியாவில் சர்வதேச மாஃபியா...அதிர்ச்சி தகவல்

Update: 2024-05-20 06:40 GMT

மனித உடல் உறுப்புகள் கடத்தி விற்பனை - இந்தியாவில் சர்வதேச மாஃபியா...அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்துச் சென்று மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்வதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், .திருச்சூர் வளபாட்டை சேர்ந்த சபித் நாசர் என்பவரை கொச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர். சபித் நாசர் சர்வதேச உடல் உறுப்பு மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி கொச்சியில் இருந்து குவைத்துக்கும், பின்னர் ஈரானுக்கும் அழைத்துச் சென்றுஅறுவை சிகிச்சை செய்து, சிறுநீரகத்தை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் பல முறை குவைத் மற்றும் ஈரானுக்கு சென்று வந்ததும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் சிக்க வாய்ப்புள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்