திடீரென சரிந்து விழுந்த சுவர் - நூலிழையில் உயிர் தப்பிய இருவர் - வெளியான திக்.. திக் காட்சி

Update: 2024-08-01 17:06 GMT

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கனமழைக்கு மத்தியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது ரயில் நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. சுற்றுச்சுவருக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு வாகனங்கள் சேதமடைதன. இது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த ௪௮ மணி நேரத்தில் பெய்த கனமழையில், மழை தொடர்பான சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்