அரசு பஸ்ஸில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி... கடவுள் போல பெண் நடத்துனர் நிகழ்த்திய அதிசயம்
தெலுங்கானா மாநிலம் கட்வால் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான சந்தியா, தனது சகோதரர்களுக்கு ராக்கி கட்ட அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த நர்ஸ் உதவியுடன் பெண் நடத்துனர் அவருக்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இரு உயிர்களை காப்பாற்றிய அரசு பேருந்து நடத்துனர் பாரதிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.