உலக அதிசய தாஜ்மகாலுக்கு வந்த சோதனை... எப்படி நடந்தது?- பேரதிர்ச்சியில் இந்தியர்கள்

Update: 2024-09-15 05:44 GMT

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலின் மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேச மாநிலம்... ஆக்ராவில்...யமுனை நதிக்கரையில் அமைதியே உருவமாய் அமைந்துள்ள தாஜ்மகாலைக் கண்டு அதிசயிக்காதவர்களே இல்லை.

ஆனால் காதலின் சின்னமாக கொண்டாடப்படும் இந்தியாவின் பெருமையான தாஜ்மகால் மேற்கூரையையும் விட்டுவைக்கவில்லை இந்த கனமழை. தாஜ்மகாலின் தோட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் தான் இவை.

இந்நிலையில், தாஜ்மகாலின் மேற்கூரையில் நீர்க்கசிவதாக அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளனர் தொல்லியல் துறை அதிகாரிகள்...

ட்ரோன் கேமரா மூலம் செய்யப்பட்ட சோதனையில் நீர்க்கசிவால் மேற்கூரையில் சேதமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் சற்றே நிம்மதியடையச் செய்துள்ளது...

இருப்பினும் பாரம்பரிய நினைவுச்சின்னமாக விளங்கும் தாஜ்மகாலை கண்ணும், கருத்துமாக கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை என்றும்... நீர்க்கசிவிற்கான காரணத்தைக் கண்டறிந்து அதிகாரிகள் அதை சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்