`பூ' வியாபாரியால் அரங்கேறிய கோரம்..?கோவிலில் கேட்ட மரண ஓலம்... துடிதுடித்து மடிந்த பக்தர்கள்...

Update: 2024-08-12 12:44 GMT

பீகார் மாநிலம்...ஜெகனாபாத் நகரம்...பராபர் மலை உச்சியில் அழகே அமைதியான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ளது கி.பி 7 ஆம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாபா சித்தேஸ்வரர் கோவில்...

சரியாக அதிகாலை 12.30 மணியிருக்கும்...பக்‌தர்கள் கூட்டம் பாபா சித்தேஸ்வரரை தரிசனம் செய்ய...பராபர் மலையில் ஏறிக் கொண்டிருந்தது...

அப்போது தான் அந்த எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்தது...

ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னே செல்ல முயலவே...கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பரிதாபமாக பலியாகினர்...

சரி...கூட்ட நெரிசலுக்கு துவக்கப் புள்ளியாக அமைந்தது எது?...

பூ வியாபாரி ஒருவர் திடீரென சண்டையிழுக்கவே...அங்கு பக்தர்கள் கூட்டத்துக்குள் பெரும் சலசலப்பு நிலவி...ஏகப்பட்ட பக்தர்கள் ஒரே இடத்தில் சிக்கி...நெரிசல் நிகழ்ந்து பக்தர்கள் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் சிலர் விளக்கியுள்ளனர்...

மேலும் சிலரோ...காவல்துறையினரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில்...தடியடி நடத்தியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகவும் கூறுகின்றனர்...

இச்சம்பவத்தில் மேலும் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

விபத்தைத் தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் கதறியழுதது காண்போரைக் கலங்கச் செய்தது...

முதன்முறையாக பராபர் மலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்...

கோவில் நிர்வாகமும், காவல்துறையும் சரியாக செயல்பட்டிருந்தால் இந்த விபத்தே நிகழ்ந்திருக்காது என்பதும் பக்தர்களின் கருத்து...

உத்தர பிரதேசத்தின் ஹத்ராசில் ஆன்மீக நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 120க்கும் மேற்பட்டவர்கள் அண்மையில் பலியாகினர்... அதேபோன்ற சம்பவம் பீகாரிலும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்