ஆந்திராவில், அண்மைக்காலமாக அதிக அளவில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வில், ஹெட்போன் அணிந்து செல்போனில் பேசியபடி செல்வதால், அதிக விபத்துக்கள் நேரிட்டது தெரியவந்தது. எனவே, விபத்துக்களை குறைப்பதற்காக, ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கார், பைக், ஆட்டோ என அனைத்து வாகன ஓட்டிகளும் பயணத்தின் போது, கழுத்தில் ஹெட்போன், ஹெட் செட் அணிந்திருந்தாலே 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.