மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனை அடுத்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 95.80 அடியாக இருந்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணிக்கு 101 அடியாக உயர்ந்து உள்ளது. இன்னும் நான்கு நாட்களில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.