மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்...

Update: 2022-07-04 02:40 GMT

மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, மலப்புரம், வண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அவசர ஊர்தி சேவைகளை தொடங்கி வைத்தார். பின்னர், பல்வேறு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமரின் கிராம சாலை திட்டம் , ஒவ்வொறு மாநிலத்தின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் என்றார். இதனை நிறைவேற்றும் வகையில், இந்த‌த் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திய ராகுல் காந்தி, இதை பரிசீலிப்பார்கள் என நம்புவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்