பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் இன்று பிற்பகல் 1 மணிக்கு காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர். இலங்கை மற்றும் மொரீஷியஸுடன் இந்தியாவின் வலுவான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளால் பலதரப்பட்ட மக்களும் பயன்பெறுவார்கள்.