"தூ*கு தண்டனை கிடைக்கும்" - சுதந்திர நாளில் மோடி மறைமுக மெசேஜ்

Update: 2024-08-15 10:36 GMT

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைப்போருக்கு விரைவாக கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சுதந்திர தின விழா உரையில் பேசிய பிரதம​ர், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழும்போது அது பரவலாக விவாதிக்கப்படுவதாகவும்,

ஆனால் இப்படிப்பட்ட அசுரத்தனமான போக்கு கொண்ட ஒருவர் தண்டிக்கப்படும்போது ​​அதுகுறித்த செய்திகள் பார்க்கப்படுவதில்லை... மாறாக ஒரு மூலையில் கட்டுப்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

தண்டனை பெறுபவர்கள் பற்றி விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்த பிரதமர்,

இதனால் இந்த பாவத்தை செய்பவர்கள், தூ*கு தண்டனை கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - இந்த பயத்தைத் தூண்டுவது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதோடு,

பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் விவாத பொருளாகி உள்ள நிலையில், அதனை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்