புர்ஜ் கலிபாவில் மிளிர்ந்த இந்திய கொடி...அபுதாபியில் முதல் இந்து கோயில்..

Update: 2024-02-14 04:10 GMT

துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அப்போது, அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதையொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா டவரில், இந்திய தேசிய கொடி ஒளிரவிடப்பட்டது. இன்று மாலை, அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில், 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர், கோயிலில் நடைபெறும் பூஜையிலும் கலந்துகொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்