போலீஸ் காரை சல்லி சல்லியாக நொறுக்கி அதிரவிட்ட இளைஞர்.மொத்த போலீஸ் படையும் அலறல்
போலீஸ் காரை சல்லி சல்லியாக நொறுக்கி அதிரவிட்ட இளைஞர்.மொத்த போலீஸ் படையும் அலறல் - நிஜத்தில் நடந்த ஆக்ஷன் காட்சி
பெரு நாட்டில், லாரியை திருடிக் கொண்டு தப்ப முயன்ற இளைஞரை விரட்டிச் சென்று போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
தலைநகர் லிமாவில் லாரி போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த 37 வயதான இளைஞர், அந்நிறுவனத்திலிருந்து டிரைலர் லாரியை திருடிக் கொண்டு, தப்பிச் செல்ல முயன்றார். தகவலறிந்து சென்ற போலீசார், லாரியை நிறுத்துமாறு இளைஞரை எச்சரித்தனர். ஆனால், குறுகலான வீதிகளில் தாறுமாறாக லாரியை ஓட்டிக் சென்ற இளைஞர், போலீஸ் வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். எனினும், போலீசார் அவரை விரட்டிச் சென்று சுட்டுப் பிடித்தனர். இதுதொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.