இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இது வரை 5 சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் ஆயிரத்து 200 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆபரேஷன் அஜய் தீட்டத்தின் கீழ் அடுத்த சிறப்பு விமானம் அக்டோபர் 22 ம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திலிருந்து புறப்படும் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா திரும்புவதற்கான பயண படிவத்தை நிரப்பியுள்ள இந்தியர்களுக்கு இது தொடர்பான விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.