ஆன்லைன் மருந்து விற்பனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆன்லைனில் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் கொள்கையை எட்டு வாரங்களுக்குள் வகுக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியைச் சேர்ந்த தோல் மருத்துவர்
ஜாகீர் அகமது தாக்கல் செய்த பொதுநல மனுவை, டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது,
ஆன்லைனில் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் கொள்கையை எட்டு வாரங்களுக்குள் வகுக்க என்று மத்திய அரசுக்கு கெடு நீதிபதிகள் கெடு விதித்தனர். இல்லையெனில், மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர், வரும் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின்போது ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்