சாலையில் ரத்தம் ஓடியதால் ஒடிசாவில் வெடித்த மோதல்... புது முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-06-18 08:02 GMT

சாலையில் ரத்தம் ஓடியதால் ஒடிசாவில் வெடித்த மோதல்... புது முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

ஒடிசாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து பாலசோரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலசோர் மாவட்டம் புஜாகியா பிர் பகுதியில் விலங்குகள் பலியிடப்பட்ட ரத்தம் சாலையில் ஓடியதாக ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாகவும், இதனையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருக்கும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதோடு, காவல்துறை கொடி அணி வகுப்பை நடத்தியது. பதற்றமான சில இடங்களில் இன்டர்நெட் சேவையை துண்டிக்கப்பட்டதோடு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். தொடர்ச்சியாக பாலசோரில் செவ்வாய்கிழமை இரவு வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அங்கு நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் மோகன் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்