கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், கடற்படைக்காக கட்டப்பட்டு வரும் கப்பலின் விவரத்தை கசியவிட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். அந்த கப்பலின் முக்கிய பகுதிகள், முகநூல் பக்கத்தில் பரவியதை அடுத்து, விசாரணை நடத்திய போலீசார், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீனிஷ் பூக்கோடன் என்பவரை கைது செய்தனர். அவர் மீது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.