நீலகிரியில் இருந்து வயநாட்டிற்கு 10 மருத்துவக் குழுக்கள் விரைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன தேவை என்று பார்த்து சுகாதாரத்துறையினர் பணிகளை மேற்கொள்வார்கள் என்றார். இந்த பணிகளுக்காக 5 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.