இந்தியத் தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினம் டெல்லியில் இன்று கொண்டாடுகிறது. இதில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொள்கிறார்.
மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குவார். 'பொதுத் தேர்தல்கள் 2024-க்கான தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சிகள்' என்ற நூல் தொகுப்பின் முதல் பிரதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குடியரசுத்தலைவரிடம் வழங்குகிறார்.
பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தயாரித்த 'எனது வாக்கு எனது கடமை' என்ற வாக்காளர் விழிப்புணர்வு குறும்படமும் இந்த நிகழ்ச்சியின் போது திரையிடப்படுகிறது.