மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள நகைக்கடையில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் மூன்று பேர் பட்டப்பகலில் வெறும் இருபதே நொடியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
புனேவின் ஹிஞ்சேவாடியில் உள்ள லக்ஷ்மி சௌக்கில் இருக்கும் நகை கடைக்குள் மூன்று பேரில் ஒருவர் கடைக்காரரின் காலரைப் பிடித்து துப்பாக்கியால் மிரட்டுகிறார். மற்ற இரு நபர்கள் பையில் நகைகளை போட்டனர். வெறும் 20 வினாடிகளுக்குள், முகமூடி அணிந்த மூவரும் கடையை விட்டு நகைகளுடன் ஓடி விடுகிறார்கள். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.