பாஜக வேட்பாளர் தோல்வியை தாங்க முடியாமல் 4 தொண்டர்கள் எடுத்த முடிவு - கதறி அழுத வேட்பாளர்

Update: 2024-06-18 03:11 GMT

பாஜக வேட்பாளர் தோல்வியை தாங்க முடியாமல் 4 தொண்டர்கள் எடுத்த முடிவு - வீடு தேடிச் சென்று கதறி அழுத வேட்பாளர்

மகாராஷ்டிராவில் தான் தோல்வியை தழுவியதால் தற்கொலை செய்துக் கொண்ட பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய பாஜக வேட்பாளர் கதறி அழுதார்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மகள், பங்கஜா முண்டே தோல்வியை தழுவினார். சரத்பவார் கட்சி வேட்பாளரிடம் 6 ஆயிரத்து 533 வாக்குகள் வித்தியாசத்தில் பங்கஜா தோல்வியை தழுவினார். இதனையத்து தங்களது தாய் தோற்றுவிட்டார் என பாஜக தொண்டர்கள் 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியது. இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களை கேட்டுக்கொண்ட பங்கஜா முண்டே, தற்கொலை செய்துக் கொண்டவர்கள் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பத்தில் குழந்தைகள் படிப்புக்கான செலவுகளையும் மற்ற பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வதாக பங்கஜா தெரிவித்துள்ளார். தற்கொலை செய்வது தனக்கு வேதனையை மட்டுமே வழங்கும் என அறிவுறுத்தியிருக்கும் பங்கஜா, தொண்டர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது, குடும்பத்தார் சொன்ன துயர கதையை கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Tags:    

மேலும் செய்திகள்