அதிவேகத்தில் வந்த லாரி... அதைவிட வேகத்தில் குறுக்கே புகுந்த பஸ்... `நொடியில்..' - ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வீடியோ

Update: 2024-08-07 15:12 GMT

லாரியின் மீது அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் பந்தம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் குறுக்கே அரசு பேருந்து ஒன்று திடீரென புகுந்தது. அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர் சமார்த்தியமாக செயல்பட்டு லாரியின் வேகத்தை குறைத்தார். இதன் காரணமாக பேருந்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், லேசான உரசலுடன் தப்பியது. சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள், பயணம் செய்த நிலையில் நூலிழையில் உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்