"2 பெண் குழந்தைங்க... எனக்கு அவர விட்டா யாரும் கிடையாது..."அடுத்த வார்த்தை பேச முடியாமல் கதறிய மனைவி

Update: 2024-06-14 03:02 GMT

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிந்த 7 தமிழர்களில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முகமது ஷெரிப்பும் ஒருவர் ஆவார் . கடந்த 12 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் அவர் போர்மேன் ஆக பணியாற்றி வந்துள்ளார். முகமது ஷெரிப்பின் உயிரிழப்பு

உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முகமது ஷெரிப்க்கு ௨ பெண் குழந்தைகள் உள்ள நிலையில் வறுமையில் வாடும் தங்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று அவரது மனைவி அஷ்ரப்புன்னிசா உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்