கேட்டாலே நடுங்கும் கை, கால்கள்... கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு..

Update: 2024-08-14 15:07 GMT

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியிருக்கிறது. கொல்கத்தா உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், மருத்துவமனை நிர்வாகத்தை கடுமையாக கண்டித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு பின்னால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த அறிக்கை முக்கியமானதாக இருந்தது எனக் கூறப்படுகிறது. அதில் மருத்துவருக்கு கொடுக்கப்பட்ட சித்தரவதையை விவரித்ததோடு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்கள் கொடுத்த அறிக்கையில், கொலை செய்யப்பட்ட மருத்துவர் பிரேத பரிசோதனை அறிக்கையில், சடலத்தில் 150 மில்லி கிராம் விந்தணு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, இது கூட்டு பலாத்காரம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதில் ஒருவரை தவிர யாரையும் கைது செய்யவில்லை, ஆதாரங்கள் கூட்டு பலாத்காரம் என காட்டுவதாகவும் , இது ஒருவரால் மட்டும் செய்ய முடியாத குற்றம் எனவும் பெற்றோர் மனுவில் தெரிவித்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்