கொல்கத்தா டாக்டர் விவகாரம்.. இதுவே லாஸ்ட் சான்ஸ்.. மம்தா தடாலடி

Update: 2024-09-16 09:24 GMT

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம், கொலை வழக்கில் நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரியும் பயிற்சி மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு வர மம்தா கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது, அதை நேரலையில் ஒளிபரப்ப மருத்துவர்கள் கோரியதால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்த சூழலில் மம்தா அரசு 5 ஆவது முறையாக மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. மாலையில் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள மருத்துவ மாணவர்கள் பிரதிநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி பேச்சுவார்த்தை என்று மம்தா அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்