முடிந்தது என நிம்மதி பெருமூச்சு விட்ட மம்தாவுக்கு பின்னாலே வந்த பெரிய ஷாக்
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இளம் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக திங்கள் அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராடிவரும் இளம் மருத்துவர்கள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் இளம் மருத்துவர்கள் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளில் நான்கு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இருப்பதாக மம்தா தெரிவித்தார்.
கொல்கத்தா ஆணையர், மருத்துவ கல்விக்கான இயக்குனர்
மற்றும் சுகாதார சேவைக்கான இயக்குனர் ஆகியோரை பதவி
நீக்கம் செய்ய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், எஞ்சியுள்ள தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என இளம் மருத்துவர்கள் உறுதியாக உள்ளனர்.
முதல்வர் மம்தா பானர்ஜியை மீண்டும் சந்திக்க வேண்டும் என மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.