கொல்கத்தா பெண் டாக்டர் கொலை.. மரண தண்டனை - கிடைத்தது நாடே எதிர்பார்த்த அறிவிப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, மேற்கு வங்க குற்ற சட்டத் திருத்தம் என்ற மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்
உயிரிழந்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க
இந்த மசோதா வகை செய்கிறது.
பாலியல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற
குற்றங்களில் பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இந்த சட்ட திருத்த
மசோதா முன்மாதிரியானது மட்டுமின்றி வரலாற்று சிறப்புமிக்கது என தெரிவித்தார்.