கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை - ஒரு உத்தரவுக்காக காத்திருக்கும் 3 பிரபல நடிகர்கள்
கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் முன்ஜாமின் தொடர்பாக இன்று நடிகர்கள் முகேஷ், சித்திக் ஆகியோர் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்...கேரளாவில் ஆலுவா பகுதியை சேர்ந்த நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவரான நடிகர் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை ஒரு வாரத்திற்கு கைது செய்யக்கூடாது என கொச்சி முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது... கைதுக்கான இடைக்கால தடை இன்று காலாவதியாகும் நிலையில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு முகேஷ் நீதிமன்றத்தை இன்று நாட உள்ளார்.... இதற்கிடையே அவருக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கும் எனவும் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக போலீஸ் காவலில் ஒப்படைக்குமாறு கேட்டும் காவல்துறை தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதிடப்பட உள்ளது. அதே நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கேரள காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரசேகரனும் இன்று முன்ஜாமீனுக்கு நீதிமன்றத்தை நாடுகிறார். மேலும், மற்றொரு நடிகையின் பாலியல் புகாரில் சிக்கிய அம்மா அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த நடிகர் சித்திக் முன்ஜாமீன் கேட்டு இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார்