கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்துவர வழிபாட்டு தலத்தில், தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட ஜெபக்கூடப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் கார்களை எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஓவ்வொரு காரையும் என்.எஸ்.ஜி படையினர் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கார்கள் குறித்து உரிய ஆவணங்களை காட்டிய பின்னரே உரிமையாளர்களிடம் வாகனங்களை கொடுக்க தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.