கர்நாடகா மாநிலத்தின் இரு அணைகளில் இருந்து தமிழக காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் கனஅடியில் இருந்த நீர்வரத்து தற்போது 8 ஆயிரத்து 38 கனஅடியாக உயர்ந்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 6 ஆயிரத்து 38 கன அடியும், கபினி அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.