மீண்டும் சர்ச்சை கருத்து கூறிய கங்கனா ரனாவத்....வினேஷ் போஹத்-க்கு வாழ்த்து கூறி சர்ச்சை
அந்த வகையில், மாதவிடாய் விடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் பேசியதற்கு ஆதரவு தெரிவித்து, பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு தேவையில்லை என பேசியிருந்தார்.
இக்கருத்து பெண்கள் மத்தியில் கடும் விவாதத்தை கிளப்பியிருந்தது..
இதே போல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு பேசியிருந்தது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது...
இதன் தொடர்ச்சியாக, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு படை பெண் கான்ஸ்டபிள், கங்கனா கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம் அரங்கேறியது...
விவசாயிகள் குறித்து அவதூறாக பேசியதே தான் அறைந்ததற்கான காரணம் என பெண் கான்ஸ்டபிள் கூறிய நிலையில், இவ்விவகாரம் பேசு பொருளானது.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் குறித்து கங்கனா பேசியுள்ளது மீண்டும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது..
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற போது, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார் கங்கனா.