இந்தியா கூட்டணி எடுத்த முடிவு
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இணைந்து 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் இணைந்து 70 தொகுதிகளில் போட்டியிட முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரண் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் எஞ்சியுள்ள தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ள அவர், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது குறித்த விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் என
இரு கட்சிகளும் இணைந்து 74 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.