ஓடும் போதே திடீரென தனியாக கழன்ற ரயில் பெட்டிகள் - கதிகலங்கிய பயணிகள்

Update: 2024-08-15 15:46 GMT

குஜராத் மாநிலம் கோதங்கம் அருகே, அகமதாபாத், மும்பை டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் இன்று காலை திடீரென பிரிந்தன. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரயில் பெட்டிகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக பயணிகள் இறங்கினர். இதனால் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே செல்லும் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். ரயில் பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டு ரயில் பயணத்தைத் தொடங்கும் என ரயில்வே துறை உறுதியளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்