இன்று மாலை முதல் 31-ஆம் தேதி வரை.. திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்ட தகவல்

Update: 2023-08-27 03:57 GMT

இன்று மாலை முதல் 31-ஆம் தேதி வரை.. திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்ட தகவல்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது...

கேரளாவின் பாரம்பரியமிக்க பண்டிகையான ஓணம், வரும் ஆகஸ்டு 29-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு, ஆகஸ்டு 31-ஆம் தேதிவரை சிறப்பு பூஜைகள் நடைபெறுமன தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, தினமும் நெய் அபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படவுள்ளன. குறிப்பாக, ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு சபரிமலை அடிவாரம் நிலக்கல்லில் சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்காக முன்பதிவு செய்யப்படும் எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதன்பின்னர், ஆகஸ்டு 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படடும்.

Tags:    

மேலும் செய்திகள்