ஆற்று வெள்ளத்துக்கே `தண்ணி' காட்டிய `தண்டர்' பாய்ஸ்... வாலிபால் ஆடி மாஸ் சம்பவம் -வைரல் வீடியோ
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவூர் பகுதியை சேர்ந்த
கிராமப்புற இளைஞர்கள், வாலிபால் மைதானம் ஒன்றை
அமைத்து, மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல்
வருடம் முழுவதும் வாலிபால் விளையாடி வருகின்றனர்.
வாலிபால் மைதானம் அருகில் உள்ள செருப்புழா
ஆற்றில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து
வாலிபால் மைதானத்தை மூழ்கடித்துள்ளது. இதனை
பொருட்படுத்தாமல் இளைஞர்கள் இடுப்பளவு தண்ணீரில்
வாலிபால் விளையாடி வருவதை, அந்த வழியாக
செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து
செல்கின்றனர்.