மதுபானங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் தூய்மையான ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவிற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
52 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறு தானியங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% சதவிகிதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டுள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். சிறுதானிய பொருட்களின் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் சிறுதானிய பொருட்கள் மீதான வரியை குறைக்கும் பரிந்துரைகளை தமிழகம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ENA எனப்படும் Extra Neutral ஆல்கஹாலை இறுதி பயன்பாட்டின் அடிப்படையில் வேறுபடுத்துவதன் மூலம் ஜிஎஸ்டி வரி மற்றும் வாட் வரி ஆகிய இரட்டை வரி விதிக்கும் முடிவை தமிழகம் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.