"உலகிற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு".. குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு

Update: 2024-10-09 16:52 GMT

மரங்கள், தாவரங்களின் முக்கியத்துவம் அறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 7-வது நிறுவன தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலகிற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு ஆயுர்வேதம் என்றும், அதன் வளர்ச்சி மனிதர்களுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் என தெரிவித்தார். மரங்கள், தாவரங்களின் பயன்பாடு குறித்து அறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டுமென கூறிய அவர், நோயாளிகளை குணப்படுத்துவதன் மூலம் மனிதகுலத்திற்கு நன்மை செய்வதே அனைவரின் நோக்கம் என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்