புவனகிரியை சேர்ந்த டீ வியாபாரியும் அவரது மகளும், 11 வது ஆண்டாக சபரிமலைக்கு சைக்கிளில் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். கடலூர் புவனகிரியை சேர்ந்தவர் கணேசன். சைக்கிளில் டீ விற்பனை செய்யும் இவரும் அவரது மகளும், சபரிமலைக்கு சைக்கிளில் யாத்திரையை தொடங்கியுள்ளனர். 11வது ஆண்டாக சபரிமலைக்கு சைக்கிள் யாத்திரையை தொடங்கியுள்ள கணேசன், சபரிமலை சன்னிதானத்தை அடைய ஏழு நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்