ராமர் குறித்து சர்ச்சை கருத்து... கொதிக்கும் பா.ஜ.க. - மும்பையில் வெடிக்கும் விவகாரம்
சரத்பவார் அணியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதேந்திரா அவாத், ராமர் அசைவம் சாப்பிடுபவர் என கூறியதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மும்பை காவல்நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் ராம் கடாம் புகார் அளித்துள்ளார். இதனிடையே, ஜிதேந்திரா அவாத், ராமர் குறித்து இழிவாகப் பேசியுள்ளதாகவும், அவரது கருத்துக்கள் பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாகவும், அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். ராமர் குறித்து அவதூறு பேசுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே, ஜிதேந்திரா அவாத்தின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.